Copyright © All rights reserved | This template is made with by Colorlib

 04634 220288     shcirudayakulam@yahoo.com

About

History Of Our Parish


இயற்கைச் சிற்பி ஆண்டுகள் பல இழைத்த இணையில்லாக் காட்சி, தெவிட்டா இன்பத் தோற்றம் கொண்ட “பொற்கோட்டிமயமும் பொதியமும் போன்றதே” என இமயமலைக்கு இணையாகச் சிறப்பிக்கப்படும் பொதிகை மலையின் அடிவாரத்தில் அழகுற அமைந்திருக்கும் இருதயகுளம் பங்கு, நூறு ஆண்டூகளுக்கும் மேலாக கிறிஸ்தவத்தில் வேரூன்றி வளாச்சி பெற்று வந்திருக்கின்றது

திருநெல்வேலி மாவட்டம், அம்பை வட்டம, விக்கிரமசிங்கபுரத்திற்கு மிக அருகில் அமைந்திருக்கும் இந்த ஊர் மலைகளும் பாறைகளும், குன்றுகளும், மரங்களும், சூழ்ந்து இயற்கை எழில்மிக்க அற்புதமான பகுதி. பாபநாசம் - திருநெல்வேலி சாலைக்கு மிக அருகில், அமலி பெண்கள் ஒ6மல்நிலைப் பள்ளிக்கு மிக அருகில் அமைந்திருக்கின்றது.

பெயர்க் காரணம் :

பெரிய குன்றுகளால் சூழப்பட்டுள்ளது தான் இந்த இருதயகுளம் என்ற கிராமம். உச்சங்குளம் (உச்சன்குளம் என்றால் “பெரிய மனிதனின் குளம்” என்பது பொருள். என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்ட இருதயகுளம் பகுதியில்

சுவாமி கெளசானல் அடிகளார் அவர்கள் திரு இருதய சகோதரர் சபையை ஏற்படுத்தியதன் காரணமாக உச்சங்குளம் என்ற பகுதி இருதயகுளமாக மாற்றப்பட்டது.

சுவாமி கெளசானல் அடிகளார் அவர்கள் திரு இருதய சகோதரர் சபையை ஏற்படுத்தியதன் காரணமாக உச்சங்குளம் என்ற பகுதி இருதயகுளமாக மாற்றப்பட்டது.

இயேசுவின் இதய அன்பால் ஈர்க்கப்பட்டு, தூய லூர்து அன்னையின் அரவணைப்பில் நூறு ஆண்டூகளுக்கும் மேலாக கிறிஸ்தவ சமயம் நிலைத்து, பல்வேறு மக்களின் இதயங்களில் விசுவாசத்தை இன்றும் விதைத்து வருவதற்குக் காரணம் இங்குள்ள திரு இருதய ஆலயமும், தூய லூர்து அன்னைத் திருத்தலக் கெபியும் ஆகும்.

1.1 இருதயகுளம் உருவான விதம் :

1893 ஏப்ரலில் பாளையங்கோட்டை மறை மாவட்ட அதிபரான சுவாமி வொடியர் (ஞானப்பிரகாசியார் சுவாமி), என்ற சேசுசபைத் துறவி பாபநாச மலைப்பகுதியில் “கட்டளைமலை? என்ற பெரிய பண்ணையை விலைக்கு வாங்கினார். அதோடு சோந்த விக்கிரமசிங்கபுரம் ஊர்ப்பகுதியில், மலையடிவாரத்தில் உள்ள நிலப்பகுதியையும் வாங்கினார்.

அருட்திரு.வெடியர் சுவாமிகளை அடுத்துப் பாளையங்கோட்டை அதிபரான சுவாமி கெளசானல், உச்சன்குளத்தில் ஒரு களஞ்சியமும், பண்ணைவீடு ஆகியவற்றை அமைத்தார். மலையினின்று வரும் காப்பி, தேயிலை மற்றும் நறுமணப்பொருள்கள் ஆகியவற்றைச் சேர்த்து வைக்க களஞ்சியமும், விவசாயப் பண்ணையில் பணிபரியும் வேலையாட்கள், கால்நடைகள் தங்க, கட்டிடங்கள் போன்றவையும் இப்பண்ணை ஸீட்டில் இடம் பெற்றன. இந்தக் கட்டிடத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு கோவிலையும் அமைத்தார். இதுவே பின்னாளில் திரு இருதய ஆலயமாக உருவெடுத்தது.பழைய கோவில்)

1.2 கெளசானல் அடிகளாரின் தொலைநோக்குப் பார்வை :

கட்டளைமலைப் பண்ணையை விலைக்கு வாங்கிய போது, அதனைக் கவனிக்க திரு... கிளைவ் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் அயாலாந்து நாட்டைச் சோந்தவர். கத்தோலிக்கர், இருப்புப் பாதைத் துறையில் ஓய்வு பெற்ற

அதிகாரி. அவரும் அவருடைய மனைவியும் இருதயகுளம் பண்ணைவீட்டில் தங்கியிருந்து நிர்வாகம் செய்து வந்தனர்.' உடல் நலத்தின் காரணமாக இந்தத் தம்பதியினர் அயாலாந்துக்குத் திரும்பிச் செல்ல தாமானித்த போது மறைமாவட்ட அதிபராக அப்போது இருந்த அருட்தந்தை கெளசானல் அடிகளார் அவர்களுக்குப் பெரும் அதார்ச்சி ஏற்பட்டது. பல ஏக்கர் பரப்புள்ள கட்டளை மலைப் பண்ணையை நாவகிக்க நம்பிக்கைக்குரிய பணியாளாகள் கிடைப்பார்களா? என்ற எண்ணம் அவரை மிகவே வருத்தியது.

விவசாயப் பண்ணையைப் பேணிப் பாதுகாக்க பொறுப்பானவர்களைத் தயாரிப்பது மட்டுமல்லாமல் விவசாயப் பண்ணை வழியாக மறைப்பணியாற்றி பெரும்பான்மை மக்களின் கிறிஸ்தவத்தில் இணைக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராய் கட்டளை மலைப் பகுதியில் வாழ்ந்த மலைச் சாதியினரைச் சந்தித்தார்.” அவர்களுடைய சமூக, பொருளாதார, ஆன்மீக, வாழ்வைச் சீரமைக்க, வளார்த்தெடுக்க என்ன செய்யலாம் என்பதை ஆழ்ந்து சிந்தித்து செயல்படுத்த ஆயத்தமானார்.

1.3 திரு இருதய சபையின் தோற்றமும், வளர்ச்சியும்:

1894ம் ஆண்டு பாப்பிறை 13ம் சிங்கராயர் சிறப்பான ஒரு நாணயத்தை வெளியிட்டார். அதன் ஒரு பக்கத்தில் “இந்தியாவே உன் மக்கள் தாம், உனக்கு மீட்பை கொண்டவர்” என்று பொறிக்குமாறு செய்த நிகழ்ச்சி அருட்திரு. கெளசானல் அடிகளாரின் மனத்திரையில் ஓடிற்று. இந்தியாவை மீட்க இந்தியாகள் தான் முன் வர வேண்டும். தமிழகத்தில் திருமறையைப் பரப்ப

தமிழாகள் தாம் முன்வர வேண்டும். எனவே தமிழகத்தில் தமிழர்களைக்
் அருட்சகோ. சேவியர் சே.ச., பார்ம் கவுஸ், இருதயகுளம் நாள்:20-12-1-2011
் குழந்தை அருள் திஇச., நிலவின் தவம், (திருநெல்வேலி: திருஇருதய சகோதரர்கள் சபை,1999) பக்.

கொண்டு, தமிழ் பண்பாட்டில் ஊறித்திளைத்த ஒரு துறவற சபையைக் கொண்டு தமிழகத்தில் திருமறை ஒளியை ஏற்ற முயற்சி மேற்கொண்டார்.

1899ம் ஆண்டூ டிசம்பர் 31ம் நாள் 19ஆம், 20 ஆம் நாற்றாண்டினுள் உலகம் கண் விழிக்கும் முன், இருதயகுளம், குருக்கள் இல்லத்திலுள்ள கோவிலில் திருப்பலி நிறைவேற்றி முதல் மூன்று அருட்சகோதரர்களை அவர்கள் அளித்த தனிப்பட்ட ஏழ்மை, கற்பு, கீழ்ப்படிதல் வார்த்தைப் பாட்டை உறுதிப்படுத்தி புதியதொரு சபையைத் தோற்றுவித்தார் அருட்திரு கெளசானல் அடிகளார்.” ஆனால் திருச்சபையிடமிருந்து அதிகாரப் பூர்வமாக ஓப்புதல் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சபையின் பெயரும், பணியும் :

இத்துறவறசபை “இயேசுவின் திரு.இருதய சகோதரர் சபை” என்ற பெயரால் அமைக்கப்பட்டது. இச்சபையின் தாய்வீடு இருதயகுளத்தில் இருக்கின்றது. இச்சகோதரர்களின் தலைசிறந்த பணிகளாக இரண்டைக் குறிப்பிடலாம்.

1. போதனையினாலும், தியானங்களினாலும், வாழ்வு முறையாலும் இயேசுவின் திருஇருதய பக்தியை மக்கள் மத்தியில் பரவச் செய்வது.
2. திருமறைத் தொண்டார்களுக்கும், திருமறை நிறுவனத்திற்கும்(41581010 பல

துறைகளிலும் உதவி புரிதல் ஆகியவை.

எனவே தங்களுடைய பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட இந்த பகுதி மக்களை மறைப்பணியாளராகவும், திருமுழுக்களிப்பவராகவும், ஆசிரியர்களாகவும் உருவாக்கும் பணியை சிரமேற்கொண்டு செய்யத் தொடங்கினர்.

நோகாணல் - அருட்சகோ. சேசுராஜ் தி.இ.ச., திருஇருதய இல்லத் தலைவர், இருதயகுளம் நாள்: 21- 12-2011